The Abode of Him Who Loosed Arrows upon Laṅkā
இலங்கைமீது கணை தொடுத்தவன் இருக்கும் இடம்
1289 கவ்வைவாளெயிற்றுவன்பேய்க் கதிர்முலைசுவைத்து * இலங்கை
வவ்வியஇடும்பைகூரக் கடுங்கணைதுரந்தஎந்தை *
கொவ்வைவாய்மகளிர்கொங்கைக் குங்குமம்கழுவிப் போந்த *
தெய்வநீர்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.