The Abode of Him Who Dispelled the Elephant's Sorrow
ஆனையின் துயர் நீக்கியவன் அமரும் இடம்
1288 தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி * மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை *
பூம்புனற்பொன்னி முற்றும்புகுந்து பொன்வரண்ட * எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. (2)