Tirunāṅkūr is the Place of Him Who Dispelled Gajendra's Sorrow
கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்
1219 முதலைத்தனிமாமுரண்தீரஅன்று
முதுநீர்த்தடத்துச்செங்கண்வேழம்உய்ய *
விதலைத்தலைச்சென்றுஅதற்கே உதவி
வினைதீர்த்தஅம்மானிடம் * விண்ணணவும்
பதலைக்கபோதத்தொளிமாடநெற்றிப்
பவளக்கொழுங்கால்பைங்கால்புறவம் *
மதலைத்தலைமென்பெடைகூடுநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!