O Mind! Worship the Gem-Mansioned Temple.
மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு
1218 நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்!
நரநாரணனே! கருமாமுகில் போல்
எந்தாய்! * எமக்கே அருளாயெனநின்று
இமையோர் பரவும் இடம் * எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து *
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே! (2)