The Place of Him Who Tore Hiraṇya is Tiruvayintirapuram
இரணியனைப் பிளந்தவன் இடம் திருவயிந்திரபுரம்
1151 மாறுகொண்டுடன்றெதிர்ந்தவல்லவுணன்தன்
மார்பகம்இருபிளவா *
கூறுகொண்டுஅவன்குலமகற்கு
இன்னருள்கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறுகொண்டமென்கரும்பிளங்கழை
தகைவிசும்புறமணிநீழல் *
சேறுகொண்டதண்பழனமதெழில்திகழ்
திருவயிந்திரபுரமே.