O Lord! My Daughter Laments, Thinking of You.
பிரானே! உன்னை நினைந்து புலம்புகிறாள் என்மகள்
1111 ஊழியின்பெரிதால்நாழிகையென்னும்
ஒண்சுடர்துயின்றதால்லென்னும் *
ஆழியும்புலம்பும் அன்றிலும்உறங்கா
தென்றலும்தீயினிற்கொடிதாம் *
தோழியோ! என்னும்துணைமுலைஅரக்கும்
சொல்லுமின்என்செய்கேன்? என்னும் *
ஏழையென்பொன்னுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!