O Lord! My Daughter Has Grown Thin from Thoughts of You.
பிரானே! என் மகள் உன் நினைவால் இளைத்தாள்
1110 சாந்தமும்பூணும் சந்தனக்குழம்பும்
தடமுலைக்குஅணியிலும்தழலாம் *
போந்தவெண்திங்கள்கதிர்சுடமெலியும்
பொருகடல்புலம்பிலும்புலம்பும் *
மாந்தளிர்மேனிவண்ணமும் பொன்னாம்
வளைகளும்இறைநில்லா * என்தன்
ஏந்திழையிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!