PT 11.8.7

வேம்பின் புழு வேம்பையே விரும்புதல் போல்

2028 வேம்பின்புழு வேம்பின்றியுண்ணாது * அடியேன்
நான்பின்னும் உன்சேவடியன்றிநயவேன் *
தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து * ஐவாய்ப்
பாம்பினணைப் பள்ளிகொண்டாய்பரஞ்சோதீ! (2)
2028 ## வேம்பின் புழு * வேம்பு அன்றி உண்ணாது * அடியேன்
நான் பின்னும் * உன் சேவடி அன்றி நயவேன் **
தேம்பல் இளந் திங்கள் * சிறைவிடுத்து * ஐவாய்ப்
பாம்பின் அணைப் * பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ 7
2028 ## vempiṉ puzhu * vempu aṉṟi uṇṇātu- * aṭiyeṉ
nāṉ piṉṉum * uṉ cevaṭi aṉṟi nayaveṉ **
tempal il̤an tiṅkal̤ * ciṟaiviṭuttu * aivāyp
pāmpiṉ aṇaip * pal̤l̤ikŏṇṭāy parañcotī-7

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2028. Like the worm that lives in a neem tree and will not eat anything except its leaves, I do not want to be anywhere except beneath your beautiful feet. You, a shining light, removed the curse of the waning crescent moon and you rest on the five-headed Adeshesa.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தேம்பல் தேய்ந்து வருந்தும்; இளந் திங்கள் இளந் சந்திரனின் தேயும்; சிறை விடுத்து நோயைத் தீர்த்தவனே!; ஐவாய்ப்பாம்பின் ஐந்து தலை பாம்பின்; கொண்டாய் மேல் பள்ளி கொள்பவனே!; அணைப்பள்ளி சயனித்திருப்பவனே!; பரஞ்சோதீ! பரஞ்சோதீயே! நீ கரும்பே!; வேம்பின் புழு வேப்பமரத்தின் புழு; வேம்பு வேப்ப இலையைத் தவிர; அன்றி வேறு எதையும்; உண்ணாது உண்ணாது; அடியேன் உன் அடியேனான; நான் அடியேனும்; பின்னும் நீ வேம்பாகவே கசந்தாலும்; உன் சேவடி அன்றி உன் திருவடிகளைத் தவிர; நயவேன் வேறொன்றை விரும்பமாட்டேன்