He is the One Who Protected Us from the Cosmic Deluge.
பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவர் அவர்
2003 நில்லாதபெருவெள்ளம்
நெடுவிசும்பின்மீதோடிநிமிர்ந்தகாலம் *
மல்லாண்டதடக்கையால்
பகிரண்டமகப்படுத்தகாலத்து * அன்று
எல்லாரும்அறியாரோ?
எம்பெருமான்உண்டுமிழ்ந்தஎச்சில்தேவர் *
அல்லாதார்தாமுளரே?
அவனருளேஉலகாவதுஅறியீர்களே?