Chapter 5

Two women speak the glories of His qualities - (மான் அமரும்)

திருச்சாழல்
Two women speak the glories of His qualities - (மான் அமரும்)
In this section, two women discuss the simplicity and greatness of the Lord through a series of questions and answers. The term "சாழல்" (Sālal) refers to a game played by women and can also mean "friend." In the first two lines, one woman speaks of the Lord's accessibility and simplicity in a somewhat teasing manner. The other woman describes and experiences + Read more
எம்பெருமானின் எளிமையையும் சிறப்பையும் இரு பெண்கள் வினா விடைகளாகக் கூறல். சாழல் என்னுஞ் சொல் மகளிர் விளையாட்டு என்று பொருள்படும் அச்சொல்லுக்கு தோழி என்றும் பொருள் உண்டு. முன் இரண்டு அடிகளால் ஒருத்தி பகவானின் சவுலப்ய குணத்தைச் சொல்லி ஏசிப் பேசுகிறாள். பின் இரண்டடிகளால் மற்றொருத்தி பகவானின் பரந்துவத்தைக் கூறி அநுபவிக்கிறாள். இவ்வாறு அமைந்தது இப்பகுதி இதை உரையாடல் பாசுரம் என்னலாம்.
Verses: 1992 to 2001
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
  • PT 11.5.1
    1992 ## மான் அமரும் மென் நோக்கி * வைதேவி இன் துணையா *
    கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்தான் காண் ஏடீ! **
    கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த பொன் அடிக்கள் *
    வானவர் தம் சென்னி மலர் * கண்டாய் சாழலே
  • PT 11.5.2
    1993 தந்தை தளை கழலத் * தோன்றிப் போய் * ஆய்ப்பாடி
    நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் காண் ஏடீ! **
    நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் நான்முகற்குத் *
    தந்தை காண் எந்தை * பெருமான் காண் சாழலே
  • PT 11.5.3
    1994 ஆழ் கடல் சூழ் வையகத்தார் * ஏசப் போய் * ஆய்ப்பாடித்
    தாழ் குழலார் வைத்த * தயிர் உண்டான் காண் ஏடீ **
    தாழ் குழலார் வைத்த * தயிர் உண்ட பொன் வயிறு * இவ்
    ஏழ் உலகும் உண்டும் * இடம் உடைத்தால் சாழலே
  • PT 11.5.4
    1995 அறியாதார்க்கு * ஆன் ஆயன் ஆகிப் போய் * ஆய்ப்பாடி
    உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்தான் காண் ஏடீ! **
    உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு *
    எறி நீர் உலகு அனைத்தும் * எய்தாதால் சாழலே
  • PT 11.5.5
    1996 வண்ணக் கருங் குழல் * ஆய்ச்சியால் மொத்துண்டு *
    கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் காண் ஏடீ **
    கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் ஆகிலும் *
    எண்ணற்கு அரியன் * இமையோர்க்கும் சாழலே 5
  • PT 11.5.6
    1997 கன்றப் பறை கறங்கக் * கண்டவர் தம் கண் களிப்ப *
    மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் காண் ஏடீ! **
    மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் ஆகிலும் *
    என்றும் அரியன் * இமையோர்க்கும் சாழலே 6
  • PT 11.5.7
    1998 கோதை வேல் ஐவர்க்கு ஆய் * மண் அகலம் கூறு இடுவான் *
    தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் காண் ஏடீ! **
    தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் ஆகிலும் *
    ஓத நீர் வையகம் * முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே 7
  • PT 11.5.8
    1999 பார் மன்னர் மங்கப் * படைதொட்டு வெம் சமத்து *
    தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ! **
    தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் *
    தார் மன்னர் தங்கள் * தலைமேலான் சாழலே 8
  • PT 11.5.9
    2000 கண்டார் இரங்கக் * கழியக் குறள் உரு ஆய் *
    வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் காண் ஏடீ **
    வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் ஆகிலும் *
    விண்டு ஏழ் உலகுக்கும் * மிக்கான் காண் சாழலே 9
  • PT 11.5.10
    2001 ## கள்ளத்தால் மாவலியை * மூவடி மண் கொண்டு அளந்தான் *
    வெள்ளத்தான் வேங்கடத்தான் * என்பரால் காண் ஏடீ! **
    வெள்ளத்தான் * வேங்கடத்தானேலும் * கலிகன்றி
    உள்ளத்தின் உள்ளே * உளன் கண்டாய் சாழலே 10