The Holy Feet of Him Who Became a Dwarf and Grew Tall Shall Rule Us.
குறளாகி நிமிர்ந்தவனின் திருவடி நம்மை ஆளும்
1986 வெந்திறல்வாணன் வேள்வியிடமெய்தி
அங்குஓர்குறளாகிமெய்ம்மையுணர *
செந்தொழில்வேதநாவின்முனியாகி
வையம்அடிமூன்றிரந்துபெறினும் *
மந்திரமீதுபோகிமதிநின்றிறைஞ்ச
மலரோன்வணங்க, வளர்சேர் *
அந்தரமேழினூடுசெலவுய்த்தபாத
மது நம்மையாளுமரசே.