PT 11.4.5

குறளாகி நிமிர்ந்தவனின் திருவடி நம்மை ஆளும்

1986 வெந்திறல்வாணன் வேள்வியிடமெய்தி
அங்குஓர்குறளாகிமெய்ம்மையுணர *
செந்தொழில்வேதநாவின்முனியாகி
வையம்அடிமூன்றிரந்துபெறினும் *
மந்திரமீதுபோகிமதிநின்றிறைஞ்ச
மலரோன்வணங்க, வளர்சேர் *
அந்தரமேழினூடுசெலவுய்த்தபாத
மது நம்மையாளுமரசே.
1986 vĕn tiṟal vāṇaṉ vel̤viyiṭam ĕyti * aṅku
or kuṟal̤ āki mĕymmai uṇara *
cĕn tŏzhil veta nāviṉ muṉi āki vaiyam *
aṭi mūṉṟu irantu pĕṟiṉum **
mantaramītu poki mati niṉṟu iṟaiñca *
malaroṉ vaṇaṅka val̤ar cer *
antaram ezhiṉūṭu cĕla uytta pātam- *
atu nammai āl̤um arace

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1986. He took the form of a dwarf-sage and went to the heroic king Mahābali’s sacrifice, reciting the Vedās as one who knows the truth. When he asked for three feet of land from the king, the king granted his wish, and he grew tall and measured the sky with one foot and the earth with the other. Let the feet of that king who measured the seven worlds and the sky rule us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வெந் திறல் கொடிய வலிமையையுடைய; வாணன் மஹாபலியின்; வேள்வியிடம் அங்கு யாகபூமியில்; ஓர் குறள் ஒப்பற்ற வாமன மூர்த்தியாய்; ஆகி எய்தி வந்து; மெய்ம்மை யதார்த்த; உணர ஞானமுடையவனாய்; செம் அனுஷ்டானத்துக்கு; தொழில் தகுந்த; வேத வேதத்தை; நாவின் நாவினால் உச்சரிக்கும்; முனி ஆகி முனிவனைப் போல் நின்று; வையம் அடி மூன்று மூன்று அடி நிலத்தை; இரந்து யாசித்து; பெறினும் பெற்றவாறே திருவிக்கிரமனாக; மந்திரமீது மந்தர மலைக்கு மேல்; போகி போய் அளாவி; மதி நின்று சந்திரன்; இறைஞ்ச வணங்கும்படியாகவும்; மலரோன் தாமரையில் பிறந்த பிரமன்; வணங்க வணங்கும்படியாகவும்; வளர் சேர் ஓங்கி வளரும்; அந்தரம் மேலுலகங்கள்; ஏழினூடு ஏழினுள்ளும்; செல உய்த்த செல்லும்படி நடந்த; பாதம் அந்தத் திருவடி; அது நம்மை நம்மை; ஆளும் அரசே ரக்ஷித்து ஆளும் அரசு

Āchārya Vyākyānam

(விளை நிலம் களை களைந்து – அடுத்து பலம் அனுபவம் பர்யந்தமாக – முன் கை மிடுக்கர் வந்து தம்மது என்று அபிமானித்து கொள்ள விரகராய் இருந்து (வாமனன் -காண்பவருக்கு ஸூ கம் அளிப்பவர் -பட்டர் ) ஒப்பற்ற குறள் வாமனனாய் பொன் கையால் நீர் ஏற்று வளர்ந்து மீட்டு அருளிய திரி விக்ரமன் அனுபவம் லோக விக்ராந்த சரணவ் சரணம் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உஜ்ஜீவிக்க வேண்டுமே )

வெந் திறல் வாணன் வேள்வியிடம்

+ Read more