PT 11.4.6

பரசுராமனானவர் நம்மை ஆள்வார்

1987 இருநிலமன்னர்தம்மைஇருநாலுமெட்டும்
ஒருநாலுமொன்றும்உடனே *
செருநுதலூடுபோகிஅவராவிமங்க
மழுவாளில் வென்றதிறலோன் *
பெருநிலமங்கைமன்னர்மலர்மங்கைநாதர்
புலமங்கைகேள்வர்புகழ்சேர் *
பெருநிலமுண்டுமிழ்ந்தபெருவாயராகி
அவர்நம்மைஆள்வர்பெரிதே.
1987 iru nila maṉṉar-tammai iru nālum ĕṭṭum *
ŏru nālum ŏṉṟum uṭaṉe *
cĕru nutalūṭu poki avar āvi maṅka *
mazhuvāl̤il vĕṉṟa tiṟaloṉ **
pĕru nila-maṅkai maṉṉar malar-maṅkai nātar *
pulamaṅkai kel̤var pukazh cer *
pĕru nilam uṇṭu umizhnta pĕru vāyar āki *
yavar nammai āl̤var pĕrite

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1987. As heroic ParasuRāman, he fought with his axe and defeated the twice eight and four kings of the world. The lord who swallowed all the seven worlds and spat them out is the beloved the earth goddess, of Lakshmi and of Nappinnai. He rules us happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரு நில பரந்த பூமண்டலத்திலிருந்த; மன்னர் தம்மை அரசர்களின்; இரு நாலும் எட்டும் இருபத்தொரு; ஒரு நாலும் உடனே ஒன்றும் தலைமுறையளவும்; செரு போர்களத்தின்; நுதலூடு போகி முகப்பில் சென்று; அவர் அவ்வரசர்களின்; ஆவி மங்க உயிர் மாள; மழுவாளில் கோடாலியினால்; வென்ற திறலோன் வென்ற பெருமான்; பெரு நில மங்கை பூமாதேவியின்; மன்னர் மன்னனும்; மலர் மங்கை திருமகளின்; நாதர் நாதனும்; புலமங்கை நீளா தேவியின்; கேள்வர் நாயகனுமான; புகழ்சேர் பெரும் புகழுடையவன்; பெரு நிலம் பூமி முழுதும்; உண்டு பிரளய காலத்தில் உண்டு; உமிழ்ந்த பின்பு வெளிப்படுத்தின; பெருவாயர் பெரிய வாயையுடைய; ஆகியவர் பெருமான்; பெரிதே வரும் காலமெல்லாம்; நம்மை நம்மை; ஆள்வர் காத்தருள்வார் அடிமை கொள்வார்