Tirumāl in His Form as a Tortoise is Our Fortress.
ஆமையான திருமால் நமக்கு அரண்
1983 செருமிகுவாளெயிற்றஅரவொன்றுசுற்றித்
திசைமண்ணும்விண்ணும்உடனே *
வெருவரவெள்ளைவெள்ளம்முழுதும்குழம்ப
இமையோர்கள்நின்றுகடைய *
பருவரையொன்றுநின்றுமுதுகில்பரந்து
சுழலக்கிடந்துதுயிலும் *
அருவரையன்னதன்மையடலாமையான
திருமால்நமக்குஓரரணே.