I Am Afraid to Scold the One Who Kicked the Cart-Demon.
சகடம் உதைத்தவனை அதட்ட அஞ்சுவேன்
1916 ஈடும்வலியுமுடைய
இந்நம்பிபிறந்தஎழுதிங்களில் *
ஏடலர்கண்ணியினானைவளர்த்தி
யமுனைநீராடப்போனேன் *
சேடன்திருமறுமார்வன்கிடந்து
திருவடியால் * மலைபோல்
ஓடும்சகடத்தைச்சாடியபின்னை
உரப்புவது அஞ்சுவேனே.