Kaṇṇaṉ's Mischiefs Are Growing!
கண்ணன் தீம்புகள் வளர்கின்றனவே!
1912 தந்தைபுகுந்திலன்நான்இங்கிருந்திலேன்
தோழிமார் ஆருமில்லை *
சந்தமலர்க்குழலாள்
தனியேவிளையாடுமிடம்குறுகி *
பந்துபறித்துத்துகில்பற்றிக்கீறிப்
படிறன்படிறுசெய்யும் *
நந்தன்மதலைக்கிங்கென்கடவோம்? நங்காய்!
என்செய்கேன்? என்செய்கேனோ?