PT 1.1.9

எல்லாவற்றையும் தரவல்லது திருமந்திரம்

956 குலம்தரும் செல்வம் தந்திடும் *
அடியார் படுதுயராயினவெல்லம் *
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் *
அருளொடுபெருநிலமளிக்கும் **
வலந்தரும்மற்றுந்தந்திடும் *
பெற்றதாயினும் ஆயினசெய்யும் *
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் *
நாராயணாவென்னும் நாமம் (2)
PT.1.1.9
956 ## kulam tarum cĕlvam tantiṭum * aṭiyār paṭu tuyar āyiṉa ĕllām *
nilam taram cĕyyum nīl̤ vicumpu arul̤um * arul̤ŏṭu pĕru nilam al̤ikkum **
valam tarum maṟṟum tantiṭum * pĕṟṟa tāyiṉum āyiṉa cĕyyum *
nalam tarum cŏllai nāṉ kaṇṭukŏṇṭeṉ * nārāyaṇā ĕṉṉum nāmam(9)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

956. The name “Nārāyaṇa” gives noble birth and removes all sorrow. It grants wealth, grace, and the highest place in SriVaikuntam (Moksha). It brings strength, joy, and a love greater than a mother’s care. I have found this name—“Nārāyaṇa”—and it will give me a good life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நாராயணா நாராயணா; என்னும் நாமம் என்னும் நாமமானது; குலம் தரும் உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்; செல்வம் தந்திடும் செல்வம் அளிக்கும்; அடியார் படு துயர் அடியவர்கள் அனுபவிக்கும்; ஆயின எல்லாம் துயரமெல்லாம்; நிலம் தரம் செய்யும் தரை மட்டமாக்கிவிடும்; நீள் விசும்பு அருளும் பரமபதத்தைக் கொடுக்கும்; அருளொடு அருளொடு; பெரு நிலம் கைங்கரியமாகிற பதவியையும்; அளிக்கும் அளிக்கும்; வலம் பெருமானை அனுபவிக்க; தரும் சக்தியைக் கொடுக்கும்; மற்றும் மேலும் எல்லா; தந்திடும் நன்மைகளையும் தந்திடும்; பெற்ற தாயினும் பெற்ற தாயைக் காட்டிலும்; ஆயின செய்யும் சிறந்த ஞானத்தைக் கொடுக்கும்; நலம் தரும் கைங்கர்யம் என்னும் நலம் தரும்; சொல்லை சொல்லான நாராயண நாமத்தை; நான் கண்டுகொண்டேன் நான் கண்டுகொண்டேன்
nārāyaṇā ennum nāmam the divine name, nārāyaṇa; kulam (for those who meditate upon it) birth in great family; tharum will grant;; selvam wealth; tharum will grant;; adiyār servitors; padu the sins to be experienced and exhausted; thuyar āyina ellām everything which is known as dhu:kham (sorrow); nilam tharam seyyum will completely flatten;; nīl̤ visumbu paramapadham; arul̤um will grant; arul̤odu with mercy; peru nilam the great position of kainkaryam; al̤ikkum will grant;; valam strength (to enjoy him); tharum will grant;; maṝum all other aspects of well-being; thandhidum will facilitate;; peṝa thāyinum more than the mother who gave the body; āyina expansion of true knowledge which is good; seyyum will cause;; nalam tharum giving kainkaryaṣrī (wealth of servitude); sollai divine name; nān ī who had no knowledge about the existence of such wealth; kaṇdu koṇdĕn got to realise.