PMT 7.6

The Remnants of the Food You Ate Were Not Available to Me!

நீ உண்ட உணவின் மிச்சம் எனக்குக் கிடைக்கவில்லை!

713 தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா!

தவழ்ந்தெழுந்துதளர்ந்ததோர்நடையால் *

மண்ணில்செம்பொடியாடிவந்து என்தன்

மார்வில்மன்னிடப்பெற்றிலேனந்தோ *

வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும்

வாரிவாய்க்கொண்டஅடிசிலின்மிச்சல் *

உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன்

என்னைஎஞ்செய்யப்பெற்றதெம்மோயே?

Text size