PMT 7.2

I Was Not Fortunate to See You Lying on Your Back

நீ மல்லாந்து கிடந்ததைக் காணப்பெற்றிலேன்

709 வடிக்கொளஞ்சனமெழுதுசெம்மலர்க்கண் மருவி

மேலினிதொன்றினைநோக்கி *

முடக்கிச்சேவடிமலர்ச்சிறுகருந்தாள்

பொலியுநீர்முகில்குழவியேபோல *

அடக்கியாரச்செஞ்சிறுவிரலனைத்தும்

அங்கையோடணைந்தானையிற்கிடந்த *

கிடக்கைகண்டிடப்பெற்றிலனந்தோ!

கேசவா! கெடுவேன்கெடுவேனே.

Text size