Among Mothers, I Am the Last and Lowest
தாய்மாருள் நான் கடையானவள்
708 ஆலைநீள்கரும்பன்னவன்தாலோ
அம்புயுத்தடங்கண்ணினன்தாலோ *
வேலைநீர்நிறத்தன்னவன்தாலோ
வேழப்போதகமன்னவன்தாலோ *
ஏலவார்குழலென்மகன்தாலோ
என்றென்றுன்னைஎன்வாயிடைநிறைய *
தாலொலித்திடும்திருவினையில்லாத்
தாயரில்கடையாயினதாயே. (2)