O Kaṇṇa! Why Have You Come Here?
கண்ணா! இங்கு ஏன் வந்தாய்?
702 மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
வீங்கிருள்வாயென்றன்வீதியூடே *
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
போகின்றபோதுநான்கண்டுநின்றேன் *
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
கைவிளிக் கின்றதும்கண்டேநின்றேன் *
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
இன்னமங்கேநடநம்பி! நீயே.