"O Kaṇṇa, You Have Deceived Me!"
கண்ணா, என்னை ஏமாற்றி விட்டாயே!
701 தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று *
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
பித்தனென்றேபிறரேசநின்றாய் *
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
யான்விடவந்த என்தூதியோடே *
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே.