"O Vāsudeva, I Have Been Waiting for You!"
வாசுதேவா, உனக்காகக் காத்திருந்தேனே!
698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்
எனைப்பலருள்ளவிவ்வூரில் * உன்தன்
மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
உன்தன் பொய்யைக்கேட்டு *
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கியமுனையாற்றில் *
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2)