PMT 4.1

I Must Be Born as a Stork upon Vēṅkaṭam Hill

வேங்கடத்தே குருகாய்ப் பிறக்க வேண்டும்

677 ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன் *

ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால் *

கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து *

கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. (2)

Text size