When Will My Eyes Behold the Lord of Tiruvaraṅgam and Rejoice!
கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!
647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த *
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி *
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் *
கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2)