The Gandharvas Were Enchanted by the Nectarine Song of the Flute
குழலின் அமுதகீதத்தில் கந்தருவர் மயங்கினர்
280 செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் *
நம்பரமன்இந்நாள்குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றனகேளீர் *
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு *
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.