The State of the Devas, Mesmerized by the Flute's Music
குழலிசையில் மயங்கிய தேவர்களின் நிலை
281 புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் * நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப *
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்தீண்டி *
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே.