The State of Tumburu and Nārada upon Hearing the Flute's Melody
குழலோசை கேட்ட தும்புரு நாரதர் நிலை
279 முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்ச * மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க *
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து *
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.