PAT 3.6.4

The Apsarās, Mesmerized by the Flute's Music

குழலிசையில் மயங்கிய அரம்பையர்

278 தேனுகன்பிலம்பன்காளியனென்னும்

தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி *

கானகம்படிஉலாவியுலாவிக்

கருஞ்சிறுக்கன்குழலூதினபோது *

மேனகையொடுதிலோத்தமைஅரம்பை

உருப்பசியரவர்வெள்கிமயங்கி *

வானகம்படியில்வாய்திறப்பின்றி

ஆடல்பாடலவைமாறினர்தாமே.

Text size