The Great Mountain Supported by Dāmodara
தாமோதரன் தாங்கிய தடவரை
270 படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் *
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான் *
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை *
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.