The Mountain Protected by Nārāyaṇa
நாராயணன் காத்த மலை
271 சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு *
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை *
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய *
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.