verse 381.1

381. த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க, அது உண்டது உருக்காட்டாதே, தேசாந்த்ர கதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே. ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் கலந்து பரிமாறுகைக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கீடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து கண்காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி, உறங்குகிற ப்ரஜையைத் தாய் முதுகிலே யணைத்துக்கொண்டு கிடக்குமா போலே, தானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே. அகவாயிலே அணைத்துக்கொண்டு. ஆட்சியில் தொடர்ச்சி நன்றென்றுவிடாதே ஸத்தையை நோக்கி உடன்கேடனாய், இவர்கள் அஸத்கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும்போது மீட்கமாட்டாதே, அநுமதி தானத்தைப் பண்ணி உதாஸீநரைப் போலேயிருந்து மீட்கைக்கிடம் பார்த்து நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே நெற்றியைக் கொத்திப் பார்த்தா லொருவழியாலும் பசைகாணா தொழிந்தால் அப்ராப்யமென்று கண்ணநீரோடே மீளுவது; தனக்கேற இடம் பெற்ற வளவிலே, என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்றாப்போலே சிலவற்றை யேறிட்டு, மடிமாங்காயிட்டு, பொன்வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து மெழுகாலே யெடுத்துக் கால்கழஞ்சென்று திரட்டுமாபோலே ஜந்ம பரம்பரைகள்தோறும், யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருத் விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே யவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo