இந்நினைவு பிறந்தபோதே க்ருதக்ருத்யன்; இந்நினைவில்லாதபோது எல்லா
துஷ்க்ருதங்களும் க்ருதம் ; இந்நினைவிலே எல்லா ஸுக்ருதங்களும் உண்டு. இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யஜ்ஞாதிகளும் ப்ராயச் சித்தாதிகளும் நிஷ்ப்ரயோஜநங்கள்; இது தன்னாலே எல்லா பாவங்களும் போம், எல்லா பலங்களும் உண்டாம்.