Chapter 8
Impatient to wait for the messengers to return and unable to bear the loneliness, ladylove plans to visit her beau at His place (Thiru Nāvāi) - (அறுக்கும் வினையாயின)
தூதர் மீளுமளவும், தனிமை பொறாத தலைவி, தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)
Āzhvār couldn’t wait for his emissaries to complete their errand and come back with messages. “Will go to Thiru Nāvāi to reach Bhagavān; will see Him until my eyes can’t see anymore; will perform servitude to Him” ruminates Āzhvār. But, he wasn’t able to go there either. Stalled, Āzhvār expresses his yearning in these hymns.
தூது சென்றவர்கள் மீண்டும் வந்து செய்திகளைச் சொல்லும்வரை ஆழ்வாரால் பொறுத்திருக்கமுடியவில்லை. “திருநாவாய் சென்று பகவானை அடைவோம்; அவனைக் கண்ணாரக் காண்போம்; அடிமை செய்வோம்” என்று எண்ணுகிறார். அங்கும் செல்ல இயலவில்லை. இருந்த இடத்திலிருந்தே இவ்வாறு மனோரதத்தைச் செலுத்துகிறார் ஆழ்வார்.
ஒன்பதாம் + Read more
Verses: 3750 to 3760
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will rule the earth for many years and their fame will spread like the fragrance of jasmine
- TVM 9.8.1
3750 ## அறுக்கும் வினையாயின * ஆகத்து அவனை *
நிறுத்தும் மனத்து ஒன்றிய * சிந்தையினார்க்கு **
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
குறுக்கும் வகை உண்டுகொலோ * கொடியேற்கே? (1) - TVM 9.8.2
3751 கொடி ஏர் இடைக் * கோகனகத்தவள் கேள்வன் *
வடி வேல் தடம் கண் * மடப் பின்னை மணாளன் **
நெடியான் உறை சோலைகள் சூழ் * திருநாவாய் *
அடியேன் அணுகப்பெறும் நாள் * எவைகொலோ? (2) - TVM 9.8.3
3752 எவைகொல் அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
கவையில் மனம் இன்றிக் * கண்ணீர்கள் கலுழ்வன் **
நவை இல் திருநாரணன் சேர் * திருநாவாய் *
அவையுள் புகலாவது ஓர் * நாள் அறியேனே (3) - TVM 9.8.4
3753 நாளேல் அறியேன் * எனக்கு உள்ளன * நானும்
மீளா அடிமைப் * பணி செய்யப் புகுந்தேன் **
நீள் ஆர் மலர்ச் சோலைகள் * சூழ் திருநாவாய் *
வாள் ஏய் தடம் கண் * மடப் பின்னை மணாளா (4) - TVM 9.8.5
3754 மணாளன் மலர் மங்கைக்கும் * மண் மடந்தைக்கும் *
கண்ணாளன் உலகத்து உயிர் * தேவர்கட்கு எல்லாம் **
விண்ணாளன் விரும்பி உறையும் * திருநாவாய் *
கண் ஆரக் களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்டே? (5) - TVM 9.8.6
3755 கண்டே களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்கள் *
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் * துரிசு இன்றி **
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
கொண்டே உறைகின்ற * எம் கோவலர் கோவே? (6) - TVM 9.8.7
3756 கோ ஆகிய * மா வலியை நிலம் கொண்டாய் *
தேவாசுரம் செற்றவனே! * திருமாலே **
நாவாய் உறைகின்ற * என் நாரண நம்பீ *
ஆஆ அடியான் * இவன் என்று அருளாயே (7) - TVM 9.8.8
3757 அருளாது ஒழிவாய் * அருள் செய்து * அடியேனைப்
பொருளாக்கி * உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் **
மருளே இன்றி * உன்னை என் நெஞ்சத்து இருத்தும் *
தெருளே தரு * தென் திருநாவாய் என் தேவே (8) - TVM 9.8.9
3758 தேவர் முனிவர்க்கு என்றும் * காண்டற்கு அரியன் *
மூவர் முதல்வன் * ஒரு மூவுலகு ஆளி **
தேவன் விரும்பி உறையும் * திருநாவாய் *
யாவர் அணுகப் பெறுவார் * இனி? அந்தோ (9) - TVM 9.8.10
3759 அந்தோ அணுகப் பெறும் நாள் * என்று எப்போதும் *
சிந்தை கலங்கித் * திருமால் என்று அழைப்பன் **
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
வந்தே உறைகின்ற * எம் மா மணி வண்ணா. (10) - TVM 9.8.11
3760 ## வண்ணம் மணி மாட * நல் நாவாய் உள்ளானை *
திண்ணம் மதிள் * தென் குருகூர்ச் சடகோபன் **
பண் ஆர் தமிழ் * ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
மண் ஆண்டு * மணம் கமழ்வர் மல்லிகையே (11)