It is Difficult to Describe the Attachment I Have for the Supreme Lord.
பரமனிடம் யான் கொண்ட பற்றைச் சொல்லுதல் அரிது
3578 ஆழிவலவினை ஆதரிப்பும்
ஆங்கவன்நம்மில்வரவுமெல்லாம் *
தோழியர்காள்! நம்முடையமேதான்?
சொல்லுவதோ? இங்கரியதுதான் *
ஊழிதோறூழியொருவனாக
நன்குணர்வார்க்குமுணரலாகா *
சூழலுடையசுடர்கொளாதித்
தொல்லையஞ்சோதிநினைக்குங்காலே.