Those Who Recite These Verses Will Become Servants of Tirumāl.
இவற்றைப் படித்தோர் திருமாலின் அடிமையாவர்
3397 சிந்தையாலும்சொல்லாலும்
செய்கையினாலும் தேவபிரானையே *
தந்தைதாயென்றடைந்த
வண்குருகூரவர்சடகோபன் *
முந்தையாயிரத்துள்இவை
தொலைவில்லிமங்கலத்தைச்சொன்ன *
செந்தமிழ்பத்தும்வல்லார்
அடிமைசெய்வார்திருமாலுக்கே. (2)