Chapter 4

Joy experienced in expounding on Sri Krishna's qualities and activities - (குரவை ஆய்ச்சியரோடு)

கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்
Āzhvār completely immersed himself in enjoying Bhagavān’s glorious deeds as Sri Krishna but was disheartened that he was unable to sustain the experience as he fell unconscious - a state of mind that he has expressed in hymn ‘piRandhavāRum’. These hymns express Āzhvār’s overflowing joy in immersing and exalting His wondrous deeds that Āzhvār missed out on previously.
எம்பெருமானின் அற்புதச் செயல்களில் ஈடுபட்ட ஆழ்வார், அவற்றை அனுபவிக்கமுடியவில்லையே என்று ‘பிறந்தவாறும்’ என்ற திருவாய்மொழியில் மனம் தளர்ந்து பேசினார். எம்பெருமானின் செயல்களை அனுபவித்து அதனால் தமக்குண்டான பெருமிதத்தை ஈண்டு வெளியிடுகிறார்.

ஆறாம் பத்து -நான்காந் திருவாய்மொழி – “குரவை” + Read more
Verses: 3376 to 3386
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will become his faultless devotees
  • TVM 6.4.1
    3376 ## குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் *
    குன்றம் ஒன்று ஏந்தியதும் *
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் *
    உட்பட மற்றும் பல **
    அரவில் பள்ளிப் பிரான் தன் * மாய
    வினைகளையே அலற்றி *
    இரவும் நன் பகலும் தவிர்கிலன் *
    என்ன குறை எனக்கே? (1)
  • TVM 6.4.2
    3377 கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் *
    கெண்டை ஒண் கண் *
    வாசப் பூங் குழல் பின்னை தோள்கள் *
    மணந்ததும் மற்றும் பல **
    மாயக் கோலப் பிரான் தன் * செய்கை
    நினைந்து மனம் குழைந்து *
    நேயத்தோடு கழிந்த போது * எனக்கு
    எவ் உலகம் நிகரே? (2)
  • TVM 6.4.3
    3378 நிகர் இல் மல்லரைச் செற்றதும் * நிரை மேய்த்ததும்
    நீள் நெடும் கை *
    சிகர மா களிறு அட்டதும் * இவை
    போல்வனவும் பிறவும் **
    புகர்கொள் சோதிப் பிரான் தன் * செய்கை
    நினைந்து புலம்பி என்றும் *
    நுகர வைகல் வைகப்பெற்றேன் * எனக்கு
    என் இனி நோவதுவே? (3)
  • TVM 6.4.4
    3379 நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க * இரங்கிற்றும்
    வஞ்சப் பெண்ணை *
    சாவப் பால் உண்டதும் * ஊர் சகடம்
    இறச் சாடியதும் **
    தேவக் கோலப் பிரான் தன் * செய்கை
    நினைந்து மனம் குழைந்து *
    மேவக் காலங்கள் கூடினேன் * எனக்கு
    என் இனி வேண்டுவதே? (4)
  • TVM 6.4.5
    3380 வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் *
    வீங்கு இருள்வாய்
    பூண்டு * அன்று அன்னைப் புலம்ப போய் * அங்கு ஓர்
    ஆய்க்குலம் புக்கதும் **
    காண்டல் இன்றி வளர்ந்து * கஞ்சனைத் துஞ்ச
    வஞ்சம் செய்ததும் *
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் * எனக்கு
    என்ன இகல் உளதே? (5)
  • TVM 6.4.6
    3381 இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் * இமில்
    ஏறுகள் செற்றதுவும் *
    உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் *
    உட்பட மற்றும் பல **
    அகல் கொள் வையம் அளந்த மாயன் * என்
    அப்பன் தன் மாயங்களே *
    பகல் இராப் பரவப் பெற்றேன் * எனக்கு
    என்ன மனப் பரிப்பே? (6)
  • TVM 6.4.7
    3382 மனப் பரிப்போடு அழுக்கு * மானிட
    சாதியில் தான்பிறந்து *
    தனக்கு வேண்டு உருக்கொண்டு * தான் தன
    சீற்றத்தினை முடிக்கும் **
    புனத் துழாய் முடி மாலை மார்பன் * என்
    அப்பன் தன் மாயங்களே *
    நினைக்கும் நெஞ்சு உடையேன் * எனக்கு
    இனி யார் நிகர் நீள் நிலத்தே? (7)
  • TVM 6.4.8
    3383 நீள் நிலத்தொடு வான் வியப்ப * நிறை பெரும்
    போர்கள் செய்து *
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் *
    உட்பட மற்றும் பல **
    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் * என்
    அப்பன் தன் மாயங்களே *
    காணும் நெஞ்சு உடையேன் * எனக்கு
    இனி என்ன கலக்கம் உண்டே? (8)
  • TVM 6.4.9
    3384 கலக்க ஏழ் கடல் ஏழ் * மலை உலகு ஏழும்
    கழியக் கடாய் *
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் *
    உட்பட மற்றும் பல **
    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் *
    இவை உடை மால்வண்ணனை *
    மலக்கும் நா உடையேற்கு * மாறு உளதோ
    இம் மண்ணின் மிசையே? (9)
  • TVM 6.4.10
    3385 மண்மிசைப் பெரும் பாரம் நீங்க * ஓர்
    பாரத மா பெரும் போர்
    பண்ணி * மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட *
    நூற்றிட்டுப் போய் **
    விண்மிசைத் தன தாமமே புக * மேவிய
    சோதி தன் தாள் *
    நண்ணி நான் வணங்கப்பெற்றேன் * எனக்கு
    ஆர் பிறர் நாயகரே? (10)
  • TVM 6.4.11
    3386 ## நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
    ஆய் * முழு ஏழ் உலகும் * தன்
    வாயகம் புக வைத்து உமிழ்ந்து *
    அவை ஆய் அவை அல்லனும் ஆம் **
    கேசவன் அடி இணைமிசைக் *
    குருகூர்ச் சடகோபன் சொன்ன *
    தூய ஆயிரத்து இப் பத்தால் *
    பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)