One Can Remove Birth and Attain Vaikuṇṭham.
பிறப்பு நீக்கி வைகுந்தம் அடையலாம்
3210 உயிரினால்குறைவில்லா உலகேழ்தன்னுள்ளொடுக்கி *
தயிர்வெண்ணெயுண்டானைத்தடங்குருகூர்ச்சடகோபன் *
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள்இப்பத்தால் *
வயிரஞ்சேர்பிறப்பறுத்து வைகுந்தம்நண்ணுவரே. (2)