Your browser does not support the audio element.
audio
2802 வீடுமின் முற்றவும் *
வீடுசெய்து * உம்முயிர்
வீடுடையானிடை *
வீடு செய்ம்மினே. (2)
2803 மின்னின் நிலையில *
மன்னுயிராக்கைகள் *
என்னுமிடத்து * இறை
உன்னுமின்நீரே.
2804 நீர்நுமதென்றிவை *
வேர்முதல்மாய்த்து * இறை
சேர்மின், உயிர்க்கு * அதன்
நேர்நிறையில்லே.
2805 இல்லதுமுள்ளதும் *
அல்லதவனுரு *
எல்லையிலந்நலம் *
புல்குபற்றற்றே.
2806 அற்றதுபற்றெனில் *
உற்றதுவீடுஉயிர் *
செற்றதுமன்னுறில் *
அற்றிறைபற்றே.
2807 பற்றிலனீசனும் *
முற்றவும் நின்றனன் *
பற்றிலையாய் * அவன்
முற்றிலடங்கே.
2808 அடங்கெழில்சம்பத்து *
அடங்கக்கண்டு * ஈசன்
அடங்கெழிலஃதென்று *
அடங்குகவுள்ளே.
2809 உள்ளமுரைசெயல் *
உள்ளவிம்மூன்றையும் *
உள்ளிக்கெடுத்து * இறை
யுள்ளிலொடுங்கே.
2810 ஒடுங்கஅவன்கண் *
ஒடுங்கலுமெல்லாம் *
விடும் பின்னுமாக்கை *
விடும்பொழுதெண்ணே.
2811 எண்பெருக்கந்நலத்து *
ஒண்பொருள்ஈறில *
வண்புகழ்நாரணன் *
திண்கழல்சேரே. (2)
2812 சேர்த்தடத் * தென்குரு
கூர்ச்டகோபன்சொல் *
சீர்த்தொடையாயிரத்து *
ஓர்த்தவிப்பத்தே. (2)