தனியன் / Taniyan

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

குருமுக அனதீத்ய ப்ராக வேதானசேஷான்

நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாது காமக

ச்வசுரம் அமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்

த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி

gurumukhamanadhītya prāha vēdānaśēṣān

narapatiparikḷptaṃ śulkamādātukāmaḥ

śvaśuramamaravandyaṃ raṅganāthasya sākṣāt

dvijakulatilakaṃ taṃ viṣṇucittaṃ namāmi

நாதமுனிகள் / nātamuṉikal̤

Word by word meaning

गुरुमुखम् ஒரு குருவிடமும் பயிலாமலே; अनधीत्य எம்பெருமான் கிருபையாலேயே; नरपतिपरिक्लृप्तं வல்லபதேவனால் ஏற்படுத்தப்பட்ட; शुल्कं आदातुकामः வித்வத் சபையில் பரிசை பெற விரும்பிய; अशेषान् वेदान् அனைத்து வேதங்களையும்; प्राह விளக்கி, விஷ்ணுவே பரம் பொருள் என்று ஸ்தாபித்து; अमरवन्द्यं தேவர்களால் வணங்கப்பட்டவரும்; रंगनाथस्य ஸ்ரீரங்கநாதருக்கே; साक्षात् श्वशुरम् மாமனாரானவரும்; द्विजकुलतिलकं அந்தணத் தலைவருமான; विष्णुचित्तं तं விஷ்ணுசித்தரை, பெரியாழ்வாரை; नमामि வணங்குகிறேன்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் * சொன்னார்

கழற்கமலம் சூடினோம் - முன்னாள்

கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

minnār taḍamadiḻśūz villiputtūrenṟoru kāl⋆ śonnār

kazaṟkamalam śūḍinōm ⋆ - munnāḻ

kiziyaṟuttān enṟuraittōm⋆ kīzmaiyiniṟ śērum

vaziyaṟuttōm neñjamē ! vandu

பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்; மின்னார் தட ஒளிமயமான பெரிய; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; வில்லிபுத்தூர் வில்லிபுத்தூர்; என்று ஒருக்கால் என்று ஒருமுறையாகிலும்; சொன்னார் சொன்ன அடியார்களின்; கழல் கமலம் பாத கமலங்களை; சூடினோம் தலையில் சூடினோம்; முன்னாள் முன்பு பாண்டியமன்னன் ஏற்படுத்திய; சபையில் விஷ்ணுவே பரம் பொருள் என்று கூறி; கிழி அறுத்தான் பொற்கிழியை அறுத்தவர் பெரியாழ்வார்; என்று உறைத்தோம் என்று உறைத்தோம்; நெஞ்சமே வந்து நெஞ்சமே உன் அநுகூலத்துக்காக; கீழ் மேனிச் சேரும் நரகத்தில் சேரும்படியான; வழி மார்க்கத்தை; அறுத்தோம் அறுத்தோம் என்கிறார்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய

வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடையபற்று

pāṇḍiyan koṇḍāḍa ppaṭṭarbirān vandānenṟu⋆

īṇḍiya śaṅgam eḍuttūda ⋆ vēṇḍiya

vēdaṅgaḻōdi⋆ viraindu kiziyaṟuttān ⋆

pādaṅgaḻ yāmuḍaiya paṭru

பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

பாண்டியன் கொண்டாட பாண்டிய மன்னன் கொண்டாட; பட்டர்பிரான் வைணவர்களின் தலைவன்; வந்தான் என்று வந்தான் என்று; ஈண்டிய சங்கம் எடுத்து அநேக வெற்றிச் சங்குகள்; ஊத முழங்க; வேண்டிய காலத்துக்கு தேவைப்பட்ட; வேதங்கள் வேதார்த்தங்களை; ஓதி அதன் பொருளை தெள்ளத் தெளியச்சொல்லி; விரைந்து கிழி விரைந்து பொற்கிழியை; அறுத்தான் அறுத்தவனின்; பாதங்கள் அந்தத் திருவடிகளை; யாமுடைய நம்முடைய புகலிடம் என்று; பற்று பற்றுங்கள்