The Mind that Went as a Messenger Has Not Returned
தூது சென்ற மனம் திரும்பவில்லை
2700 சீரார்திருத்துழாய்மாலை நமக்கருளி *
தாரான்தருமென்று இரண்டத்திலொன்றதனை *
ஆரானுமொன்னாதார் கேளாமேசொன்னக்கால் *
ஆராயுமேலும் பணிகேட்டுஅதன்றெனிலும் *
போராதொழியாதே போந்திடுநீயென்றேற்கு *
காரார்கடல்வண்ணன் பின்போனநெஞ்சமும் *
வாராதே என்னைமறந்ததுதான் * - வல்வினையேன்