Rāmāṉuja is He Who Gives Refuge and Grants Heaven
சரண் கொடுத்து வானம் கொடுப்பவன் இராமானுசன்
3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு * நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் ** வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கு * அத்
தானம் கொடுப்பது * தன்தக வென்னும் சரண்கொடுத்தே.