Your browser does not support the audio element.
audio
2717 தன்நாபிவலயத்துப் பேரொளிசேர் *
மன்னியதாமரை மாமலர்ப்பூத்து * அம்மலர்மேல்
முன்னந்திசைமுகனைத் தான்படைக்க *
2718 மற்றவனும் முன்னம்படைத்தனன் நான்மறைகள் * -
அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில் *
நன்னெறிமேம்பட்டன நான்கன்றே * -
2719 நான்கினிலும் பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது * ஓர்
தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும் *
என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி *
துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் * வெஞ்சுடரோன்-
2720 மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும் *
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து *
தொன்னெறிக்கண்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால் *
இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார் *
என்னவுங் கேட்டறிவதில்லை * உளதென்னில்-
2721 மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் *
அன்னதோரில்லியினூடுபோய் * - வீடென்னும்
தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே *
அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து * ஆங்
கன்னவரைக் கற்பிப்போம்யாமே * - அதுநிற்க