2756 அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே *
மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய் *
முன்னாயதொண்டையாய்க் கெண்டைகுலமிரண்டாய் *
அன்னதிருவுருவம் நின்றதறியாதே *
என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் *
பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு *
மன்னுமறிகடலுமார்க்கும் * மதியுகுத்த
இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும் *
தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ? *