The Perfect Lord of Kuṟuṅkuṭi is He Who Gave a Place to Śiva
சிவனுக்கு இடங்கொடுத்தவர் குறுங்குடி நம்பி
1798 அக்கும்புலியினதளும் உடையார்அவரொருவர் *
பக்கம்நிற்கநின்ற பண்பரூர்போலும் *
தக்கமரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின்பிள்ளை வெள்ளிறவுண்ணும்குறுங்குடியே. (2)