Chapter 3

Thiruppullāni 1 - (தன்னை நைவிக்கிலேன்)

திருப்புல்லாணி 1
Thiruppullāni 1 - (தன்னை நைவிக்கிலேன்)
The āzhvār describes the divine beauty of Soundaryarajan in these verses as if the heroine, captivated by the beauty of her beloved, narrates it to her friend.
தலைமகனின் சவுந்தரியத்தில் மயங்கிய தலைமகள் தன் தோழிக்கு உரைப்பதுபோல், ஆழ்வார் சவுந்தரியராஜனின் திருவுருவ அழகை இங்கே வருணித்துள்ளார்.
Verses: 1768 to 1777
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 9.3.1

1768 தன்னைநைவிக்கிலேன் வல்வினையேன்தொழுதும்எழு *
பொன்னைநைவிக்கும் அப்பூஞ்செருந்திமணநீழல்வாய் *
என்னைநைவித்து எழில்கொண்டகன்றபெருமானிடம் *
புன்னைமுத்தம்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணியே. (2)
1768 ## தன்னை நைவிக்கிலேன் * வல் வினையேன் தொழுதும் எழு *
பொன்னை நைவிக்கும் * அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் **
என்னை நைவித்து * எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் *
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து * அழகு ஆய புல்லாணியே 1
1768 ## taṉṉai naivikkileṉ * val viṉaiyeṉ tŏzhutum ĕzhu- *
pŏṉṉai naivikkum * ap pūñ cĕrunti maṇa nīzhalvāy **
ĕṉṉai naivittu * ĕzhil kŏṇṭu akaṉṟa pĕrumāṉ iṭam *
puṉṉai muttam pŏzhil cūzhntu * azhaku āya pullāṇiye-1

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1768. She says, “O heart, you suffer with your love for him. How can I control it? Is it because of my bad karmā? In the cool shadows of the cherundi grove blooming with golden flowers he loved me and then left me taking my beauty with him. He is the god of Thiruppullāni where the punnai trees shed pearl-like flowers in the groves. O heart, let us go there and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்வினையேன் கொடிய பாவத்தையுடைய நான்; தன்னை என்னை; நைவிக்கிலேன் அழித்துக்கொள்ள மாட்டேன்; பொன்னை பொன்னை; நைவிக்கும் தோற்கடிக்கவல்ல; அப் பூஞ் செருந்தி புன்னைப் பூக்களின்; மண நீழல் வாய் மணமுள்ள நிழலிலே; என்னை நைவித்து என்னை ஈடுபடுத்தி கலந்த; எழில் என் மேனி நிறத்தை; கொண்டு அகன்ற கவர்ந்து கொண்டு அகன்ற; பெருமானிடம் பெருமான் இருக்குமிடம்; புன்னை முத்தம் முத்துப்போன்ற பூக்களையுடைய; பொழில் புன்னைமரச் சோலைகளால்; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகிய; புல்லாணியே திருப்புல்லாணியை; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு மனமே!

PT 9.3.2

1769 உருகிநெஞ்சே! நினைந்துஇங்குஇருந்தென்? தொழுதும்எழு *
முருகுவண்டுண்மலர்க்கைதையின் நீழலில்முன்னொருநாள் *
பெருகுகாதன்மை என்னுள்ளமெய்தப்பிரிந்தானிடம் *
பொருதுமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1769 உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? * தொழுதும் எழு *
முருகு வண்டு உண் மலர்க் கைதையின் * நீழலில் முன் ஒருநாள் **
பெருகு காதன்மை என் உள்ளம் * எய்தப் பிரிந்தான் இடம் *
பொருது முந்நீர்க் கரைக்கே * மணி உந்து புல்லாணியே 2
1769 uruki nĕñce niṉaintu iṅku iruntu ĕṉ? * tŏzhutum ĕzhu- *
muruku vaṇṭu uṇ malark kaitaiyiṉ * nīzhalil muṉ ŏrunāl̤ **
pĕruku kātaṉmai ĕṉ ul̤l̤am * ĕytap pirintāṉ iṭam *
pŏrutu munnīrk karaikke * maṇi untu pullāṇiye-2

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1769. She says, “O heart! You melt with love. What is the use of staying here thinking of him? Once, one day, he loved me under the shadow of blooming thazhai plants where singing bees drink honey from the flowers, and left me there and since then my love for him has grown in my heart. He is the god of Thiruppullāni where the waves dash on the banks of the river and leave jewels. O heart, come let us go and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; இங்கு இருந்து இங்கேயிருந்துகொண்டு; நினைந்து உருகி சிந்தித்து உருகுவதனால்; என் என்ன பயன்; முருகு வண்டு உண் வண்டுகள் தேனைப் பருகும்; மலர்க் கைதையின் தாழம்பூக்களின்; நீழலின் முன் ஒருநாள் நிழலிலே முன்பு ஒரு நாள்; என் உள்ளம் என் நெஞ்சில்; பெருகு காதன்மை எய்த காதல் வளர்த்தவன்; பிரிந்தான் பிரிந்து போன பெருமான்; இடம் இருக்குமிடம்; பொருது அலைகளோடு; முந்நீர் கரைக்கே கூடின கடற்கரையிலே; மணி உந்து ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வரும்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.3

1770 ஏதுசெய்தால்மறக்கேன்? மனமே! தொழுதும்எழு *
தாதுமல்குதடம்சூழ்பொழில் தாழ்வர்தொடர்ந்து * பின்
பேதை நினைப்பிரியேன் இனிஎன்று அகன்றானிடம் *
போதுநாளும்கமழும் பொழில்சூழ்ந்தபுல்லாணியே.
1770 ஏது செய்தால் மறக்கேன்? * மனமே தொழுதும் எழு *
தாது மல்கு தடம் சூழ் பொழில் * தாழ்வர் தொடர்ந்து ** பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி * என்று அகன்றான் இடம் *
போது நாளும் கமழும் * பொழில் சூழ்ந்த புல்லாணியே 3
1770 etu cĕytāl maṟakkeṉ? * maṉame tŏzhutum ĕzhu- *
tātu malku taṭam cūzh pŏzhil * tāzhvar tŏṭarntu ** piṉ
petai niṉṉaip piriyeṉ iṉi * ĕṉṟu akaṉṟāṉ iṭam *
potu nāl̤um kamazhum * pŏzhil cūzhnta pullāṇiye-3

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1770. She says, “I am innocent. What can I do to forget him? Come, get up and let us worship him. He followed me into the grove dripping with pollen and filled with ponds and promised me he wouldn’t leave me, but he did. He is the god of Thiruppullāni where the fragrance of flowers spreads all day. O heart, come, let us go there and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனமே! மனமே!; ஏது செய்தால் எதைச் செய்வதனால் அவரை; மறக்கேன் மறப்பேன் மறக்க முடியவில்லையே; தாது மல்கு பூக்களின் மகரந்தத்தூள் நிறைந்த; தடம் சூழ் தடாகங்களால் சூழ்ந்த; பொழில் சோலைகளின்; தாழ்வர் அருகே என்னை; தொடர்ந்து தொடர்ந்து வந்து; பின் பேதை நின்னை பேதையே! உன்னை; பிரியேன் இனி என்று இனி பிரியமாட்டேன் என்று; அகன்றான் சொல்லி பிரிந்த; இடம் பெருமானிருக்குமிடம்; போது நாளும் எப்போதும் பூக்களின்; கமழும் மணம் கமழும்; பொழில் சூழ்ந்த சோலைகள் சூழ்ந்த; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.4

1771 கொங்குண்வண்டேகரியாகவந்தான் கொடியேற்கு * முன்
நங்களீசன் நமக்கேபணித்தமொழிசெய்திலன் *
மங்கைநல்லாய்! தொழுதும்எழு போய்அவன்மன்னுமூர் *
பொங்குமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1771 கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் * கொடியேற்கு * முன்
நங்கள் ஈசன் * நமக்கே பணித்த மொழி செய்திலன் **
மங்கை நல்லாய் தொழுதும் எழு * போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே * மணி உந்து புல்லாணியே 4
1771 kŏṅku uṇ vaṇṭe kariyāka vantāṉ * kŏṭiyeṟku * muṉ
naṅkal̤ īcaṉ * namakke paṇitta mŏzhi cĕytilaṉ **
maṅkai nallāy tŏzhutum ĕzhu- * poy avaṉ maṉṉum ūr
pŏṅku munnīrk karaikke * maṇi untu pullāṇiye-4

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1771. She says, “O friend, you are beautiful among women! Carrying a Garudā flag he came to me, loved me and promised that he would not leave me but he didn’t keep his promise. The only witness there was the bee that drinks honey. He stays in Thiruppullāni where the rising waves of the ocean dash on the banks of the river and leave jewels behind. Come, let us go and worship him there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு உண் தேனுண்ணும்; வண்டே வண்டு ஒன்றே; கரியாக ஸாக்ஷியாக; கொடியேற்கு முன் பாபியான என் முன்; வந்தான் நங்கள் ஈசன் வந்தான் வந்த பெருமான்; நமக்கே பணித்த முன்பு என்னிடம்; மொழி செய்திலன் சொன்னபடி செய்யவில்லை; மங்கை நல்லாய்! உயிர்த்தோழியே!; போய் அவன் அந்த பெருமான் போய்; மன்னும் ஊர் இருக்குமிடம்; மணி ரத்னங்களை; உந்து தள்ளிக்கொண்டு வரும்; பொங்கு முந்நீர் அலைமோதுகின்ற; கரைக்கே கடற்கரையிலுள்ள; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.5

1772 உணரில்உள்ளம்சுடுமால் வினையேன்தொழுதும்எழு *
துணரிஞாழல்நறும்போது நம்சூழ்குழல்பெய்து * பின்
தணரில்ஆவிதளருமென அன்புதந்தானிடம் *
புணரியோதம்பணிலம் மணியுந்துபுல்லாணியே.
1772 உணரில் உள்ளம் சுடுமால் * வினையேன் தொழுதும் எழு *
துணரி ஞாழல் நறும் போது * நம் சூழ் குழல் பெய்து ** பின்
தணரில் ஆவி தளரும் என * அன்பு தந்தான் இடம் *
புணரி ஓதம் பணில * மணி உந்து புல்லாணியே 5
1772 uṇaril ul̤l̤am cuṭumāl * viṉaiyeṉ tŏzhutum ĕzhu- *
tuṇari ñāzhal naṟum potu * nam cūzh kuzhal pĕytu ** piṉ
taṇaril āvi tal̤arum ĕṉa * aṉpu tantāṉ iṭam *
puṇari otam paṇila * maṇi untu pullāṇiye-5

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1772. She says, “When I think of what happened to me my heart burns. Surely I have done bad karmā. He decorated my hair with bunches of flagrant nyāzhal flowers, and loved me, but then he left me and I suffer. He is the god of Thiruppullāni where the waves of the ocean leave conches and jewels on the shores. Come, let us go there and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வினையேன் உள்ளம் பாவியான என் உள்ளம்; உணரில் அவரை நினைத்த மாத்திரத்திலே; சுடுமால் கொதிக்கிறது; துணரி நாழல் பூங்கொத்துக்களை உடைய கொங்கு; நறும் போது பூக்களின் மணம் மிக்க பூக்களை; நம் சூழ் குழல் பெய்து என் தலையிலே சூட்டி; பின் தணரில் இனி உன்னை விட்டுப் பிரிந்தால்; ஆவி என் உயிர்; தளரும் என பிரிந்து போகும் என்று; அன்பு தந்தான் அன்பு காட்டி பின் பிரிந்த; இடம் பெருமான் இருக்குமிடம்; புணரி ஓதம் கடல் அலைகள்; பணிலம் மணி சங்குகளையும் ரத்தினங்களையும்; உந்து தள்ளிக்கொண்டு வரும்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.6

1773 எள்கிநெஞ்சே! நினைந்திங்கிருந்தென்? தொழுதும்எழு *
வள்ளல்மாயன்மணிவண்ணன்எம்மான் மருவுமிடம் *
கள்ளவிழும்மலர்க்காவியும் தூமடற்கைதையும் *
புள்ளும்அள்ளல்பழனங்களும்சூழ்ந்த புல்லாணியே.
1773 எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? * தொழுதும் எழு *
வள்ளல் மாயன் * மணிவண்ணன் எம்மான் மருவும் இடம் **
கள் அவிழும் மலர்க் காவியும் * தூ மடல் கைதையும் *
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த * புல்லாணியே 6
1773 ĕl̤ki nĕñce niṉaintu iṅku iruntu ĕṉ? * tŏzhutum ĕzhu- *
val̤l̤al māyaṉ * maṇivaṇṇaṉ ĕmmāṉ maruvum iṭam **
kal̤ avizhum malark kāviyum * tū maṭal kaitaiyum *
pul̤l̤um al̤l̤al pazhaṉaṅkal̤um cūzhnta * pullāṇiye-6

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1773. She says, “O heart, what is the use of worrying and staying here thinking of Māyan, our generous, sapphire-colored lord and his love? He is the god of Thiruppullāni surrounded with birds and fields with wet sand where kāvi flowers drip honey and thāzhai flowers with beautiful leaves bloom, opening their lovely petals. Come, let us go there and worship him. . ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எள்கி நெஞ்சே! அவனிடம் ஈடுபட்ட மனமே!; நினைந்து இங்கு அவனை சிந்தித்து உருகி இங்கு; இருந்து என் இருந்து என்ன பயன்; வள்ளல் மாயன் வள்ளலானவன் அவன் மாயன்; மணிவண்ணன் மணிவண்ணன்; எம்மான் எம்பெருமான்; மருவும் இடம் விரும்பியிருக்குமிடம்; கள் அவிழும் மது பெருகும்; மலர்க் காவியும் செங்கழுநீர் மலர்களும்; தூ மடல் வெளுத்தமடல் களையுடைய; கைதையும் தாழைகளும்; புள்ளும் அள்ளல் பலவகையான பறவைகளும்; பழனங்களும் சேறுமிக்க வயல்களும்; சூழ்ந்த சூழ்ந்த; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.7

1774 பரவிநெஞ்சே! தொழுதும்எழு போய்அவன்பாலமாய் *
இரவும்நாளும் இனிக்கண்துயிலாதிருந்துஎன்பயன்? *
விரவிமுத்தம் நெடுவெண்மணல்மேற்கொண்டு * வெண்திரை
புரவியென்னப்புதம்செய்து வந்துந்துபுல்லாணியே.
1774 பரவி நெஞ்சே தொழுதும் எழு * போய் அவன் பாலம் ஆய் *
இரவும் நாளும் இனி கண் துயிலாது * இருந்து என் பயன்? **
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு * வெண் திரை *
புரவி என்னப் புதம்செய்து * வந்து உந்து புல்லாணியே 7
1774 paravi nĕñce tŏzhutum ĕzhu- * poy avaṉ pālam āy *
iravum nāl̤um iṉi kaṇ tuyilātu * iruntu ĕṉ payaṉ? **
viravi muttam nĕṭu vĕṇ maṇal mel kŏṇṭu * vĕṇ tirai *
puravi ĕṉṉap putamcĕytu * vantu untu pullāṇiye-7

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1774. She says, “O pitiful heart, what is the use of staying here thinking of his love, unable to sleep night and day? He stays In Thiruppullāni where the white waves come jumping like horses, bringing pearls and leaving them on the abundant white sand. O heart, let us go and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; போய் அவன் பிரிந்து போன; பாலம் ஆய் பரவி அவனை நினைத்து துதித்து; இனி இரவும் நாளும் இனி இரவும் பகலும்; கண் துயிலாது உறங்காதிருப்பதனால்; இருந்து என் பயன் என்ன பயன்; விரவி முத்தம் முத்துக்களோடு கலந்து; நெடு வெண் மணல் நிறைய வெண்மணல்களை; மேல் கொண்டு கொண்டு வந்து; வெண்திரை வெளுத்த அலைகள்; புரவி என்ன குதிரை போல; புதம் செய்து தாவி வந்து; வந்து உந்து தள்ளுமிடமான; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.8

1775 அலமும்ஆழிப்படையும்உடையார் நமக்குஅன்பராய் *
சலமதாகித்தகவொன்றிலர் நாம்தொழுதும்எழு *
உலவுகால்நற்கழியோங்கு தண்பைம்பொழிலூடு * இசை
புலவுகானல் களிவண்டினம்பாடுபுல்லாணியே.
1775 அலமும் ஆழிப் படையும் உடையார் * நமக்கு அன்பர் ஆய் *
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் * நாம் தொழுதும் எழு **
உலவு கால் நல் கழி ஓங்கு * தண் பைம் பொழிலூடு * இசை
புலவு கானல் * களி வண்டு இனம் பாடு புல்லாணியே 8
1775 alamum āzhip paṭaiyum uṭaiyār * namakku aṉpar āy *
calam-atu āki takavu ŏṉṟu ilar * nām tŏzhutum ĕzhu- **
ulavu kāl nal kazhi oṅku * taṇ paim pŏzhilūṭu * icai
pulavu kāṉal * kal̤i vaṇṭu iṉam pāṭu pullāṇiye-8

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1775. She says, “He with a conch and a discus loved me and left me, leaving me to suffer. He cheated me and I shouldn’t love him. He is the god of Thiruppullāni, filled with salt pans and streams of water where happy bees sing in the cool flourishing groves and their music spreads on the banks of the ocean that smell with fish. Come, let us go and worship him there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலமும் கலப்பையையும்; ஆழிப் படையும் சக்கரமும் உடைய; உடையார் நமக்கு பெருமான் நம் விஷயத்தில்; அன்பர் ஆய் அன்பு உடையவர் போல்; சலம் அது ஆகி கபட நாடகமாடி; தகவு சிறிதும் இரக்கமில்லாதவராக; ஒன்று இலர் இருக்கிறார்; உலவு கால் தென்றல் காற்றையுடைய; நல் கழி நல்ல உப்பங்கழிகளிலே; புலவு கானல் பிரிந்தார் இருக்குமிடமான; ஓங்கு தண் உயர்ந்து குளிர்ந்து பரந்த; பைம் பொழிலூடு கடற்கரை சோலைகளிலே; களி வண்டு இனம் களிவண்டுகளின் கூட்டமானது; இசை பாடு நாம் இசைபாடும் நாம்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.9

1776 ஓதிநாமம்குளித்துஉச்சிதன்னால் ஒளிமாமலர் *
பாதம்நாளும்பணிவோம் நமக்கேநலமாதலின் *
ஆதுதாரானெனிலும்தரும் அன்றியுமன்பராய் *
போதும்மாதே! தொழுதும் அவன்மன்னுபுல்லாணியே.
1776 ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் * ஒளி மா மலர் *
பாதம் நாளும் பணிவோம் * நமக்கே நலம் ஆதலின் **
ஆது தாரான் எனிலும் தரும் * அன்றியும் அன்பர் ஆய் *
போதும் மாதே தொழுதும் * அவன் மன்னு புல்லாணியே 9
1776 oti nāmam kul̤ittu ucci-taṉṉāl * ŏl̤i mā malar *
pātam nāl̤um paṇivom * namakke nalam ātaliṉ **
ātu tārāṉ ĕṉilum tarum * aṉṟiyum aṉpar āy *
potum māte tŏzhutum- * avaṉ maṉṉu pullāṇiye-9

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-14

Divya Desam

Simple Translation

1776. She says, “O dear friend, let us fold our hands and praise his names, placing beautiful bright flowers on his feet and worshiping him. Whether he gives anything in return or not, loving and worshiping him is what we should do. Let us love him—that is enough. Come, let us go to Thiruppullāni and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாதே! தோழிப்பெண்ணே!; நமக்கே நலம் நமக்கே நலம்; ஆதலின் ஆதலால்; குளித்து ஸ்நாநம்பண்ணி; ஓதி நாமம் அவன் நாமம் ஓதி; ஒளி மா மலர் ஒளி பொருந்திய சிறந்த மலர் கொண்டு; பாதம் பாதத் தாமரைகளை [உபாயம் சரணாகதி]; உச்சி தன்னால் தலையினால்; நாளும் பணிவோம் நாள்தோறும் வணங்குவோம் [பக்தி]; ஆது தாரான் எந்த நலனும் அவன் தராவிட்டாலும்; எனிலும் இந்த ஸாதனை; தரும் [ஸாதனானுஷ்டானம்] தந்திடும்; அன்றியும் தந்தாலும் தராவிட்டாலும்; அன்பர் ஆய் போதும் பக்தராய் போவோம்; அவன் மன்னு அவன் இருக்கும்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு

PT 9.3.10

1777 இலங்குமுத்தும்பவளக்கொழுந்தும் எழில்தாமரை *
புலங்கள்முற்றும்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணிமேல் *
கலங்கலில்லாப்புகழான் கலியனொலிமாலை *
வலங்கொள்தொண்டர்க்குஇடமாவது பாடில் வைகுந்தமே. (2)
1777 ## இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் * எழில் தாமரை *
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த * அழகு ஆய புல்லாணிமேல் *
கலங்கல் இல்லாப் புகழான் * கலியன் ஒலிமாலை *
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது * பாடு இல் வைகுந்தமே 10
1777 ## ilaṅku muttum paval̤ak kŏzhuntum * ĕzhil tāmarai *
pulaṅkal̤ muṟṟum pŏzhil cūzhnta * azhaku āya pullāṇimel *
kalaṅkal illāp pukazhāṉ * kaliyaṉ ŏlimālai *
valamkŏl̤ tŏṇṭarkku iṭam āvatu- * pāṭu il vaikuntame-10

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1777. Kaliyan, the poet of faultless fame, composed a garland of pāsurams on beautiful Thiruppullāni surrounded with groves filled with lovely lotus flowers and flourishing with corals and shining pearls. If devotees learn and sing these pāsurams and circle the temple of the god, they will go to Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கு முத்தும் ஒளியுள்ள முத்துக்களும்; பவளக் கொழுந்தும் பவளக் கொழுந்தும்; எழில் தாமரை அழகிய தாமரைகளுமுள்ள; புலங்கள் தடாகங்களையுடைய; பொழில் சோலைகளாலே; முற்றும் சூழ்ந்து எங்கும் சூழ்ந்த; அழகு ஆய அழகான; புல்லாணிமேல் திருப்புல்லாணியைக் குறித்து; கலங்கல் இல்லா கலக்கமில்லாத; புகழான் கீர்த்தியையுடையவரான; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த சொல் மாலையான; வலம் கொள் இப்பாசுரங்களை அனுஸந்திக்கும்; தொண்டர்க்கு தொண்டர்களுக்கு; இடமாவது இடமாவது; பாடு இல் ஒரு துன்பமுமில்லாத; வைகுந்தமே ஸ்ரீவைகுந்தமே