Chapter 2

Thirukkannapuram 2 - (தெள்ளியீர் தேவர்க்கும்)

திருக்கண்ணபுரம் 2
Thirukkannapuram 2 - (தெள்ளியீர் தேவர்க்கும்)
Sowriraja Perumal, the hero, has not shown grace to the āzhvār, the heroine. The heroine's body has become emaciated, and her complexion has changed. Observing this condition, the mother laments, criticizing the hero's nature and expressing sorrow for the heroine's youth. The āzhvār has structured this section in such a way that it reflects the mother's lamentation over the heroine's state.
ஆழ்வாராகிய தலைமகளுக்குச் சவுரிராஜப் பெருமாளாகிய தலைமகன் அருள் செய்யவில்லை. தலைவியின் உடல் மெலிந்தது. அவளது நிறம் மாறியது. அந்நிலை கண்ட தாய் தலைமகனது தன்மையைப் பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறுதல்போல் இப்பகுதியை அமைத்துள்ளனர் ஆழ்வார்.
Verses: 1658 to 1667
Grammar: Veṇṭaḷaiyālvanta Taravu Kocchakakkalippā / வெண்டளையால்வந்த தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will live long with fame on this earth surrounded with oceans
  • PT 8.2.1
    1658 ## தெள்ளியீர் தேவர்க்கும் * தேவர் திருத் தக்கீர் *
    வெள்ளியீர் வெய்ய * விழு நிதி வண்ணர் ** ஓ
    துள்ளு நீர்க் * கண்ணபுரம் தொழுதாள் இவள்
    கள்வியோ? * கை வளை கொள்வது தக்கதே? 1
  • PT 8.2.2
    1659 நீள் நிலாமுற்றத்து * நின்று இவள் நோக்கினாள் *
    காணுமோ * கண்ணபுரம் என்று காட்டினாள் **
    பாணனார் திண்ணம் இருக்க * இனி இவள்
    நாணுமோ? * நன்று நன்று நறையூரர்க்கே 2
  • PT 8.2.3
    1660 ## அருவி சோர் வேங்கடம் * நீர்மலை என்று வாய்
    வெருவினாள் * மெய்யம் வினவி இருக்கின்றாள் **
    பெருகு சீர்க் * கண்ணபுரம் என்று பேசினாள்
    உருகினாள் * உள்மெலிந்தாள் இது என்கொலோ? 3
  • PT 8.2.4
    1661 உண்ணும் நாள் இல்லை * உறக்கமும் தான் இல்லை *
    பெண்மையும் சால * நிறைந்திலள் பேதை தான் **
    கண்ணன் ஊர் கண்ணபுரம் * தொழும் கார்க் கடல்
    வண்ணர்மேல் * எண்ணம் இவட்கு இது என்கொலோ? 4
  • PT 8.2.5
    1662 கண்ணன் ஊர் * கண்ணபுரம் தொழும் காரிகை *
    பெண்மை என்? தன்னுடை * உண்மை உரைக்கின்றாள் **
    வெண்ணெய் உண்டு ஆப்புண்ட * வண்ணம் விளம்பினால் *
    வண்ணமும் * பொன் நிறம் ஆவது ஒழியுமே 5
  • PT 8.2.6
    1663 வட வரை நின்றும் வந்து * இன்று கணபுரம்
    இடவகை கொள்வது * யாம் என்று பேசினாள் **
    மடவரல் மாதர் என் பேதை * இவர்க்கு இவள்
    கடவது என் * கண் துயில் இன்று இவர் கொள்ளவே? 6
  • PT 8.2.7
    1664 தரங்க நீர் பேசினும் * தண் மதி காயினும் *
    இரங்குமோ? * எத்தனை நாள் இருந்து எள்கினாள் **
    துரங்கம் வாய் கீண்டு உகந்தான் * அது தொன்மை * ஊர்
    அரங்கமே என்பது * இவள் தனக்கு ஆசையே 7
  • PT 8.2.8
    1665 தொண்டு எல்லாம் நின் அடியே * தொழுது உய்யுமா
    கண்டு * தான் கண்ணபுரம் * தொழப் போயினாள் **
    வண்டு உலாம் கோதை என் பேதை * மணி நிறம்
    கொண்டு தான் * கோயின்மை செய்வது தக்கதே? 8
  • PT 8.2.9
    1666 முள் எயிறு ஏய்ந்தில * கூழை முடிகொடா *
    தெள்ளியள் என்பது ஓர் * தேசு இலள் என் செய்கேன் **
    கள் அவிழ் சோலைக் * கணபுரம் கை தொழும்
    பிள்ளையை * பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 9
  • PT 8.2.10
    1667 ## கார் மலி * கண்ணபுரத்து எம் அடிகளை *
    பார் மலி மங்கையர் கோன் * பரகாலன் சொல் **
    சீர் மலி பாடல் * இவை பத்தும் வல்லவர் *
    நீர் மலி வையத்து * நீடு நிற்பார்களே 10