PT 7.5.3

இராவணனைக் கொன்றவன் ஊர் திருவழுந்தூர்

1590 செம்பொன்மதிள்சூழ்தென்னிலங்கைக்கிறைவன் சிரங்கள்ஐயிரண்டும் *
உம்பர்வாளிக்குஇலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் *
கொம்பிலார்ந்தமாதவிமேல் கோதிமேய்ந்தவண்டினங்கள் *
அம்பராவும்கண்மடவார் ஐம்பாலணையும்அழுந்தூரே.
1590 cĕm pŏṉ matil̤ cūzh tĕṉ ilaṅkaikku iṟaivaṉ * ciraṅkal̤ ai iraṇṭum *
umpar vāl̤ikku ilakku āka * utirtta uravoṉ ūrpolum- **
kŏmpil ārnta mātavimel * koti meynta vaṇṭu iṉaṅkal̤ *
ampu arāvum kaṇ maṭavār * aimpāl aṇaiyum azhuntūre-3

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1590. The strong god who with his divine arrows cut off the ten heads of the king of Lankā in the south surrounded by precious golden forts stays in Thiruvazhundur where bees drink honey from the branches of Madhavi vines and come and swarm around the flowers in the hair of beautiful women with sharp arrow-like eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்பில் ஆர்ந்த கிளைகள் நிறந்த; மாதவி மேல் குருக்கத்தி மரத்தின் மேலே; கோதி தளிர்களைக் கீறி; மேய்ந்த மது அருந்திய; வண்டினங்கள் வண்டினங்கள்; அம்பு அராவும் அம்புபோன்ற; கண் கண்களை உடைய; மடவார் பெண்களின்; ஐம்பால் கூந்தலின் மீது; அணையும் வந்து சேரும்; அழுந்தூரே ஊர் திருவழுந்தூர்; செம்பொன் செம்பொன் மயமான; மதிள் சூழ் மதில்களாலே சூழந்த; தென் இலங்கைக்கு இலங்கைக்கு; இறைவன் அரசன் ராவணனின்; சிரங்கள் ஐ இரண்டும் பத்து தலைகளையும்; உம்பர் வாளிக்கு ப்ரஹ்மாஸ்திரத்திற்கு; இலக்காக இலக்காக; உதிர்த்த உரவோன் உதிர்த்த பெருமானின்; ஊர் போலும் ஊர் திருவழுந்தூர்