PT 7.5.2

பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்

1589 பாரித்தெழுந்தபடைமன்னர்தம்மை மாள * பாரதத்துத்
தேரில்பாகனாயூர்ந்த தேவதேவன்ஊர்போலும் *
நீரில்பணைத்தநெடுவாளைக்கு அஞ்சிப்போனகுருகினங்கள் *
ஆரல்கவுளோடுஅருகணையும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1589 pārittu ĕzhunta * paṭai maṉṉar-tammai māl̤a * pāratattut
teril pākaṉ āy ūrnta * teva-tevaṉ ūrpolum- **
nīril paṇaitta nĕṭu vāl̤aikku * añcip poṉa kuruku iṉaṅkal̤ *
āral kavul̤oṭu aruku aṇaiyum * aṇi ār vayal cūzh azhuntūre-2

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1589. The god of gods who drove the chariot for Arjunā in the Bhārathā war and destroyed the Kauravās with their mighty army stays in Thiruvazhundur surrounded with flourishing fields where cranes, frightened of large vālai fish, fly away and come back again to catch small āral fish in the pond.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீரில் பணைத்த நீரில் துள்ளிவிளையாடும்; நெடுவாளைக்கு பெரிய மீன்களுக்கு; அஞ்சிப்போன பயந்து ஓடிப்போன; குருகு இனங்கள் குருகு என்னும் பறவை இனங்கள்; ஆரல் ஆரல் என்னும் சிறுமீனை; கவுளோடு வாயில் கவ்விக் கொண்டு; அருகு பெரிய மீனின் அருகில் வந்து; அணையும் அணையும்; அணியார் அழகுமிக்க; வயல்சூழ் வயல் சூழ்ந்த; அழுந்தூரே திருவழுந்தூர்; பாரித்து கண்ணனை வெற்றி பெறவேண்டுமென்று; எழுந்த விரும்பி எழுந்த; படை ஆயுதபாணிகளான; மன்னர் தம்மை அரசர்கள்; மாள முடியும்படி; பாரதத்து பாரதப் போரில்; தேரில் பாகன் ஆய் தேர் பாகனாய்; ஊர்ந்த ஊர்ந்து வந்த; தேவ தேவன் தேவாதிதேவனின்; ஊர் போலும் ஊர் திருவழுந்தூர்