This is the Temple of Trivikrama
திருவிக்கிரமன் கோயில் இது
1343 காற்றிடைப்பூளைகரந்தனஅரந்தையுறக்
கடலரக்கர்தம்சேனை *
கூற்றிடைச்செல்லக்கொடுங்கணைதுரந்த
கோலவில்லிஇராமன்தன்கோயில் *
ஊற்றிடைநின்றவாழையின்கனிகள்
ஊழ்த்துவீழ்ந்தனஉண்டுமண்டி *
சேற்றிடைக்கயல்களுகள்திகழ்வயல்சூழ்
திருவெள்ளியங்குடியதுவே.